இலங்கையில் 5ஆவது ஆண்டைக் கொண்டாடும் OPPO | தினகரன்


இலங்கையில் 5ஆவது ஆண்டைக் கொண்டாடும் OPPO

இலங்கையில் 5ஆவது ஆண்டைக் கொண்டாடும் OPPO-OPPO Celebrates Colorful 5 Years in Sri Lanka

31, ஓகஸ்ட், 2020, கொழும்பு, இலங்கை : புகழ்பெற்ற கையடக்கத்தொலைபேசி மற்றும் துணைக்கருவிகள் நாமமான OPPO, இலங்கையில் தனது செயற்பாடுகளின் ஐந்தாவது ஆண்டை அண்மையில் நிறைவுசெய்தது. சமூக ஊடகங்களில் ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கானவர்களை இலக்குவைத்து 2015ஆம் ஆண்டு உள்ளூர் சந்தையில் கால் தடத்தைப் பதித்திருந்த OPPO. இலங்கையில் மிகவும் விரும்பப்படும் வர்த்தக நாமங்களில் ஒன்றாகத் தன்னை உயர்த்திக் கொண்டதுடன், அனைத்து மக்கள் தொகையையும் ஈர்க்கும் வர்த்தக நாமங்களில் மலிவானதும், அதிநவீன சாதங்களின் விரிவான உள்ளடக்கங்களைக் கொண்டதாகவும் மாறியது.

இலங்கையில் 5ஆவது ஆண்டைக் கொண்டாடும் OPPO-OPPO Celebrates Colorful 5 Years in Sri Lanka

இந்த வர்த்தகநாமத்தின் வெற்றி குறித்து Xinda Lanka (Pvt) இன் (OPPO ஸ்ரீலங்கா) பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லீ கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை சந்தையில் OPPO அடைந்த வெற்றிகள் குறித்து நாம் நன்றியுடன் இருக்கின்றோம். எங்கள் விநியோகஸ்தர்கள், கூட்டாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் குறிப்பாக எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி” என்றார்.

2018ஆம் ஆண்டு உள்ளூரின் முன்னணி தொழில்நுட்ப மற்றும் கையடக்கத்தொலைபேசி சமூகமான அன்ட்ரொய்ட் வெடகாரயோ நடத்திய கருத்துக் கணிப்பில் 'இலங்கையில் பிரபலமான வருடத்துக்கான ஸ்மார்ட்போன் வர்த்தக நாமம்' என்ற பட்டத்தை வென்றமை இலங்கையிலுள்ள காலப் பகுதியில் OPPO அடைந்த வெற்றியில் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் 5ஆவது ஆண்டைக் கொண்டாடும் OPPO-OPPO Celebrates Colorful 5 Years in Sri Lanka

OPPO கடந்த 5 வருடங்களில் F தொடர், ரெனோ தொடர் மற்றும் மிட்-டயல், A தொடர் ஊடாக ஆரம்பகட்ட தொலைபேசிகள் என்பவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. OPPO ஹொலிவுட், பொலிவுட்மற்றும் உள்ளூர் பிரபலங்கள் மற்றும் செல்வாக்குச் செலுத்துபவர்களால் பெரிதும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வர்த்தக நாமமாகும்.

OPPO சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் பூகோள பங்காளராகவும், 2016 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு அனுசரணையாளராகவும் இணைந்துகொண்டது. 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கு அனுசரணையாளராகக் காணப்பட்ட OPPO, சிறந்த செயற்திறன் மிக்க 20 கிளை முகாமையாளர்களின் கடுமையான உழைப்பை பாராட்டும் வகையில் அவர்கள் இறுதிப் போட்டியைப் பார்வையிடுவற்கு அழைத்துச்சென்று அதற்கான அனைத்து செலவீனங்களையும் ஏற்றுக்கொண்டது.

2018ஆம் ஆண்டில் விம்பெல்டனின் முதலாவது ஆசிய பங்காளராக இணைந்த பெருமையும் இந்த வர்த்தக நாமத்துக்கு உண்டு. 2019ஆம் ஆண்டில் OPPO ஆனது புகழ்பெற்ற ரோலண்ட்-கரோஸ் மற்றும் ரோலக்ஸ் பரிஸ் மாஸ்டர் போட்டிகளுக்கு மூன்று வருடங்களுக்கான உத்தியோகபூர்வ ஸ்மார்ட் போனாக இணைந்தது. அந்த வருடத்தில் ரோலண்ட்-க்ரோஸ் ஜுனியர் வைல்ட் கார்ட் தொடரின் தலைப்புக்கான பங்காளராகவும் இணைந்தது.

இலங்கையில் 5ஆவது ஆண்டைக் கொண்டாடும் OPPO-OPPO Celebrates Colorful 5 Years in Sri Lanka

அண்மைய தொற்றுநோய் காலத்தின்போது நெருக்கடியைத் தணிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவுவதற்காக கொவிட்-19 சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்துக்கு OPPO 1.2 மில்லியன் ரூபாய்களை வழங்கியிருந்தது. இந்த வர்த்தகநாமத்துக்கு சிறந்த மரியாதையுள்ள இலங்கைக்கு மீளத்திருப்பி உதவும் சந்தர்ப்பமாக இதனை OPPO கருதுகிறது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி OPPO தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முகாமைத்துவம் தொடர்பில் நினைவுபடுத்தல்களை பகிர்ந்துகொண்டு பங்காளர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தது.

ஐந்து வருட நிறைவை முன்னிட்டு மூன்று உற்சாகமான பிரசாரங்களை திட்டமிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட OPPO மொடல்களைக் கொள்வனவு செய்யும்போது OPPO 5 வருட நிறைவுக்கான ரீ-ஷேர்ட்டுக்களையும் பெற்றுக் கொள்ளலாம். of A31, A52, F15, Reno2 f, A5 2020 & A9 2020 ஆகிய மொடல்களின் ஒவ்வொரு கொள்வனவின் போதும் இலவச ரீ-ஷேர்ட்டைப் பெற்றுக் கொள்ளலாம். எந்தவொரு வாடிக்கையாளரும் OPPO கையடக்கத்தொலைபேசியைக் கொள்வனவு செய்து கையடக்கத்தொலைபேசியின் பெட்டியுடன் செல்பியொன்றை எடுத்து முகப்புத்தகத்தில் தரவேற்றம்செய்து @opposrilanka எனடேக் செய்வதன் ஊடாக OPPO Enco Free, OPPO Enco W31, W11 மற்றும் backpack என்பவற்றை வெல்லும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.

OPPO பற்றி
2015ஆம் ஆண்டு OPPO இலங்கையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன், குறுகிய காலத்தில் பிரபலம்பெற்ற உலகளாவிய ஸ்மார்ட் சாதன வர்த்தகநாமமாகப் பெயர்பெற்றது. செல்பியை மையப்படுத்திய ஸ்மார்ட்போனை OPPO அறிமுகப்படுத்தியதிலிருந்து புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அதனை எல்லைகளை விரிவுபடுத்தியது. புதிய தொழில்நுட்பம், உள்ளகத்தில் காணப்படும் செயலிகள் என்பவற்றை உள்ளடக்கிய புதிய மொடல்கள் மூலம் வாடிக்கையாளர்களின் அபிலாஷைகளை எப்போதும் திருப்திப்படுத்தும் வர்த்தக நாமமாக விஸ்தரிக்கப்பப்பட்டது. OPPOவின் செயற்பாடுகள் 40ற்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் விஸ்தரிக்கப்பட்டிருப்பதுடன், உலகளாவிய ரீதியில் 6 ஆய்வு நிறுவுனங்களும், 4 R&D நிலையங்களையும் லண்டனில் சர்வதேச வடிவமைப்பு நிலையத்தையும் கொண்டிருப்பதுடன், இவற்றில் 40,00ற்கும் அதிகமான பணியாளர்கள் அர்ப்பணிப்பான சேவையை வழங்குகின்றனர். OPPO ஸ்ரீலங்கா அபான்ஸ், சிங்ஹகிரி, டயலொக், டராஸ் மற்றும் அங்கீகராமளிக்கப்பட்ட OPPO டீலர்களுடன் பங்கான்மையை ஏற்படுத்தி இலங்கை முழுவதும் இந்த வர்த்தக நாமம் சென்றடைவதை உறுதிப்படுத்தியுள்ளது.


Add new comment

Or log in with...