பெய்ரூட் வெடிப்பு; காயமடைந்த இலங்கையர் 22ஆக உயர்வு | தினகரன்

பெய்ரூட் வெடிப்பு; காயமடைந்த இலங்கையர் 22ஆக உயர்வு

அண்மையில் லெபனான், பெய்ரூட் நகரில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளதாக, லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் ஷானி கருணாரத்ன தெரிவித்தார்.

பெய்ரூட்டில் கடந்த ஓகஸ்ட் 04ஆம் திகதி, 2,750 தொன் அமோனியம் நைத்திரேட்டுடன் கூடிய கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் காரணமாக சுமார் 190 பேர் உயிரிழந்ததோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,000 ஐ தாண்டியதாக, வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வெடிப்புச் சம்பவத்தில் 300,000 பேர் வரையில் வீடிழந்துள்ளதோடு, 10-15 பில்லியன் டொலர் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.(சு)


Add new comment

Or log in with...