எஸ்.பி. திஸாநாயக்க கடமை பொறுப்பேற்பு | தினகரன்

எஸ்.பி. திஸாநாயக்க கடமை பொறுப்பேற்பு

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுவின் தலைவராக, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தனது கடமைகளை இன்று (30) பொறுப்பேற்றுக்கொண்டார்.
 
நுவரெலியா மாவட்ட செயலகத்திலுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றதோடு, நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி. புஸ்பகுமார முன்னிலையில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
 
(தலவாக்கலை குறூப் நிருபர் - பி. கேதீஸ்)
 

Add new comment

Or log in with...