அமரர் தொண்டமானின் 107ஆவது ஜனன தினம் இன்று | தினகரன்

அமரர் தொண்டமானின் 107ஆவது ஜனன தினம் இன்று

அமரர் தொண்டமானின் 107ஆவது ஜனன தினம் இன்று-Saumya Moorthy Thondaman 107th Birthday

- உருவச்சிலைக்கு மாலை அணிவிப்பு
- ஞாபகார்த்த ஆவண கண்காட்சி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அமரர்  சௌமிய மூர்த்தி தொண்டமானின் 107 வது ஜனன தினம் இன்றாகும்.

அமரர் தொண்டமானின் 107ஆவது ஜனன தினம் இன்று-Saumya Moorthy Thondaman 107th Birthday

இதனையொட்டி இன்று (30) ஞாயிற்றுக்கிழமை, இலங்கையின் பழைய பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர், தோட்ட வீடமைப்பு மற்றும்‌ சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்‌ இராஜாங்க அமைச்சர்‌  ஜீவன் தொண்டமான் தலைமையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

அமரர் தொண்டமானின் 107ஆவது ஜனன தினம் இன்று-Saumya Moorthy Thondaman 107th Birthday

இதன்போது ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன், முன்னாள் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் அன்னாரது உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர்.

அமரர் தொண்டமானின் 107ஆவது ஜனன தினம் இன்று-Saumya Moorthy Thondaman 107th Birthday

அதனைத் தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவனில் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் ஞாபகர்த்த ஆவண கண்காட்சி ஒன்றும் இடம்பெற்றது.

(தலவாக்கலை குறூப் நிருபர் - பி. கேதீஸ்)

Add new comment

Or log in with...