யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடமையேற்பு | தினகரன்

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடமையேற்பு

மிக எளிமையாக நடைபெற்ற வைபவம்

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா நேற்று காலை மிக எளிமையாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற சமய வழிபாடுகளைத் தொடர்ந்து, பீடாதிபதிகள், பல்கலைக்கழகப் பதிவாளர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்களால் துணைவேந்தர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட பேராசிரியர் சிறிசற்குணராஜா தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

எஸ்.சொரூபன், எஸ்.நிதர்சன்


Add new comment

Or log in with...