குவைத்தில் உள்ளோருக்கு வீசா காலம் நீடிப்பு | தினகரன்

குவைத்தில் உள்ளோருக்கு வீசா காலம் நீடிப்பு

குவைத்தின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த மாதத்துடன் விசா காலம் முடிவடைபவர்களுக்கு செப்டெம்பர் 1 முதல் மூன்று மாதங்கள் நீடித்து உத்தரவிட்டது.

அமைச்சகத்தின் இணையதளத்தில் நீட்டிப்புக் காலம் மாற்றப்படும். விசா காலத்தை நீட்டிப்பிற்காக மக்கள் வருகை அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றால் விசா அலுவலகங்கள் மூடப்பட்டதால் முதற்கட்டமாக மார்ச் முதல் மே வரையும், இரண்டாம் கட்டமாக ஜூன் முதல் ஓகஸ்ட் வரையும் நீட்டித்து உத்தரவிட்டது. தற்போது, மேலும் 3 மாதங்கள் நீடித்துள்ளது.

குவைட்டின் மக்கள் தொகையில் 70 வீத மக்கள் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...