2020 GCE O/L பரீட்சைகள் 2021 ஜனவரியில் (UPDATE)

➡️ இரண்டாம் தவணை விடுமுறை: ஒக்டோபர் 10 - நவம்பர் 08
➡️ 3ஆம் தவணை காலம்: நவம்பர் 09 - டிசம்பர் 23
➡️ 3ஆம் தவணை விடுமுறை: டிசம்பர் 24 - ஜனவரி 01
➡️ 2021 முதலாம் தவணை: ஜனவரி 04 ஆரம்பம்
➡️ GCE OL பரீட்சைக்குப் பின் பாடசாலைகள் 2021 பெப்ரவரி 01 இல் மீண்டும் திறக்கப்படும்.

இவ்வருடம் இடம்பெறவிருந்த க.பொ.த. சாதாரணதர பரீட்சை, அடுத்த வருடம் ஜனவரி 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக வழமை போன்று  இவ்வருடம் டிசம்பர் மாதம் பரீட்சைகளை நடாத்த தடைகள் ஏற்பட்டதோடு, இது தொடர்பாக நேற்று (27) பிற்பகல் விசேட கலந்துரையாடலொன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

அதன்படி, 2020 ஒக்டோபர் 10 முதல் 2020 நவம்பர் 08 வரை பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இவ்வருடத்தின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2020 நவம்பர் 09 ஆரம்பமாகி 2020 டிசம்பர் 23 அன்று முடிவடைவதோடு, டிசம்பர் 24 முதல் ஜனவரி 01ஆம் திகதி வரை 3ஆம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் பாடசாலையின் முதலாம் தவணை ஜனவரி 04ஆம் திகதி ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வருடத்திற்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் (2021 ஜனவரி 18 - 27) மாணவர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு, ஜனவரி 01 முதல் 17 வரை, கற்றலுக்கான விடுமுறை வழங்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் நவம்பர் 06ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

இதேவேளை ஓகஸ்ட் மாதம் இடம்பெறும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஒக்டோபர் 11ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குப் பின், பாடசாலைகள் 2021 பெப்ரவரி 01 இல் மீண்டும் திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Image may contain: text


Add new comment

Or log in with...