தரம் 01 சீருடை வவுச்சர்கள் செப். 30 வரை செல்லுபடியாகும்

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் முதலாம் தர மாணவர்களுக்காக இந்த வருடத்தில் வழங்கப்பட்ட பாடசாலை சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இவ்வவுச்சர்களுக்கான  செல்லுபடியாகும் காலம் ஓகஸ்ட் 31ஆம் திகதியுடன் காலாவதியாகுவதோடு, தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு குறித்த வவுச்சர்களுக்கு மாணவர்கள் சீருடைகளை பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.(சு) 


Add new comment

Or log in with...