40ஆவது இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த | தினகரன்

40ஆவது இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த

40ஆவது இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த-Susil Premajayantha Sworn in As State Minister

சுசில் பிரேமஜயந்த எம்.பி. இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

கல்விச்‌ சீர்திருத்தங்கள்‌, திறந்த பல்கலைக் கழகங்கள்‌ மற்றும்‌ தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சராக, சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

40ஆவது இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த-Susil Premajayantha Sworn in As State Minister

இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த ஓகஸ்ட் 12ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வில், 28 அமைச்சுகளை ஜனாதிபதி, பிரமர் உள்ளிட்ட 25 பேர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதோடு, 39 இராஜாங்க அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தனர்.

ஏற்கனவே வர்த்தமானிப்படுத்தப்பட்ட அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் பட்டியலுக்கு அமைய, 40 ஆவது இராஜாங்க அமைச்சராக, சுசில் பிரேமஜயந்த தற்போது பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.


Add new comment

Or log in with...