மைத்திரியின் இல்லத்தில் ஏப். 21 ஆணைக்குழு பொலிஸ் பிரிவு

ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு அதிகாரிகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் கொழும்பு, பேஜட் வீதியில் அமைந்துள்ள இல்லத்திற்கு, குறித்த அதிகாரிகள் சென்றுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக இன்றையதினம் (26) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தன்னால் குறித்த பொலிஸ் பிரிவிற்கு வருகை தர முடியாது எனவும், கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வருகை தந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறும், குறித்த ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு, முன்னாள் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில்  வாக்குமூலம்வழங்குவதற்காக முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(சு)


Add new comment

Or log in with...