Wednesday, August 26, 2020 - 10:36am
கடந்த ஓகஸ்ட் 12ஆம் திகதி நியமிக்கப்பட்ட 35 இராஜாங்க அமைச்சுகளுக்கும் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் அமைச்சரவைச் செயலாளர் டப்ளியூ.எம்.டீ.ஜே. பெனாண்டோவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை (19) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சரவையினால் இந்நியமனங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தைப் பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளராக, எஸ். அருமைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
PDF File:
Add new comment