பிரதமர் மஹிந்தவுக்கு ஆஸி. பிரதமர் வாழ்த்து

- நாட்டுக்கு வருமாறு மொரிசனுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர்

அண்மையில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று (21) பிற்பகல் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன்போது, இரு நாட்டு பிரதமர்களும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அந்நியோன்யமாக ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பில் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்குமான கருத்துகள் இதன்போது பரிமாறப்பட்டுள்ளது.   

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் புதிய அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும், பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும், அவுஸ்திரேலியா பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொவிட்-19  நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் இலங்கைக்கு வருகை தருமாறு அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனுக்கு, இலங்கை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த அழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், இதற்கு முன்னர் இலங்கைக்கு தான் மேற்கொண்டுள்ள விஜயத்தை நினைவுகூர்ந்ததோடு, இவ்வழகிய நாட்டின் அதிசயத்தை மீண்டும் கண்டுகளிப்பதற்காக மிக விரைவில் வருகை தருவதற்கு எதிர்பார்ப்பதாக, அவுஸ்திரேலிய பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.  


Add new comment

Or log in with...