9ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய | தினகரன்


9ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

9ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய-Ranjith Siyambalapitiya Elected As Deputy Speaker of the 9th Parliament

9ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக, ரஞ்சித் சியம்பலாபிட்டிய எம்.பி. தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (20) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில், அப்பதவிக்கான தெரிவு இடம்பெற்றது.

இதன்போது, ஆளும் கட்சி உறுப்பினர் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயர் முன்மொழியப்பட்டது.

அவரது பெயரை இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஷா வழிமொழிந்தார்.

அதனைத் தொடர்ந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகராக போட்டியின்றி சபாநாயகரால் நியமிக்கப்பட்டார்.

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவில் கேகாலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், 103,300 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.


Add new comment

Or log in with...