மீண்டும் சபை முதல்வராக தினேஷ்; ஆளுங்கட்சி கொறடா ஜோன்ஸ்டன் | தினகரன்


மீண்டும் சபை முதல்வராக தினேஷ்; ஆளுங்கட்சி கொறடா ஜோன்ஸ்டன்

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, மீண்டும் சபை முதல்வராகவும் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

அரசாங்க பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் குறித்த பதவிகளில் அவ்விருவரையும் நியமிப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திலும் இவர்களுக்கு குறித்த பதவி ஒதுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, நாளை மறுதினம் (20) 09ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

09ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்விற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளதோடு, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை முன்வைத்து, ஜனாதிபதி தனது பாராளுமன்ற உரையை பி.ப. 3.30 மணிக்கு நிகழ்த்தவுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில்வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி புதிய பாராளுமன்றம் கூடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...