ரூபா 9 கோடி பெறுமதியான நகைகளுடன் நால்வர் கைது | தினகரன்


ரூபா 9 கோடி பெறுமதியான நகைகளுடன் நால்வர் கைது

ரூபா 9 கோடி பெறுமதியான நகைகளுடன் நால்வர் கைது-Jewellery Robbery-Batticaloa

மட்டு.நகரில் பாரிய நகை கொள்ளை

மட்டக்களப்பு நகரில் பிரபல நகைக் கடையை உடைத்து சுமார் 09 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளைக் கொள்ளையிட்ட நால்வர் பெருந்தொகையான நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.கே.ஹெட்டியாராச்சி நேற்று இதனைத் தெரிவித்தார்.   மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல நகைக்கடையான சொர்ணம் நகை மாளிகையை சில தினங்களுக்கு முன்னர் உடைத்து சுமார் பத்து கோடி ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பல இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டிருந்தது.

ரூபா 9 கோடி பெறுமதியான நகைகளுடன் நால்வர் கைது-Jewellery Robbery-Batticaloa

இது தொடர்பாக ஒரு பெண் உட்பட நால்வரை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகள் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கொள்ளையர்கள் கொரோனா சீருடையை அணிந்து கொள்ளையிட்டதாகவும் தெரியவருகிறது.

மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

(மட்டக்களப்பு குறூப் தினகரன் நிருபர் - ரீ.எல். ஜவ்பர்கான், பெரிய போரதீவு தினகரன் நிருபர் - வ. சக்திவேல்)


Add new comment

Or log in with...