மேலும் 8 தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியீடு

மேலும் 8 தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியீடு-8 More National List-Gazetted By Election Commission

- 29 தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் 27 பேர் நியமனம்
- ஐ.தே.க.; அபே ஜனபல கட்சி இன்னும் முடிவில்லை

- 4 தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் உள்ளிட்ட 12 பெண்கள் பாராளுமன்றிற்கு

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கமைய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 29 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில், இதுவரை 27 பேர் உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டுள்ளனர்.

முதற் கட்டமாக, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு கிடைத்த 17 உறுப்பினர்கள், இலங்கை தமிழ் அரசு கட்சிக்குரிய (த.தே.கூ.) ஒரு உறுப்பினர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்குரிய ஒரு உறுப்பினர் அடங்கிய அதி விசேட வர்த்தமானி கடந்த 10ஆம் திகதி, தேர்தல்கள் செயலகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் 8 தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியீடு-8 More National List-Gazetted By Election Commission

அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்டமாகசஜித் பிரேமதாஸ தலைமையிலான, ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த 07 உறுப்பினர்கள் மற்றும் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான, தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த ஒரு உறுப்பினர் அடங்கிய அதி விசேட வர்த்தமானி நேற்று (14) வெளியிடப்பட்டுள்ளது.மேலும் 8 தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியீடு-8 More National List-Gazetted By Election Commission
அந்த வகையில், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 பெண்களுடன், இதுவரை 4 பெண்கள் தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் மொத்தமாக 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் 9ஆவது பாராளுமன்றத்தில் பங்குவகிக்கவுள்ளனர்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களை பெயரிடுவது நேற்றுடன் நிடைவடையவிருந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சி மற்றம் அபே ஜனபல பக்ஷய (எமது மக்கள் கட்சி) ஆகியவற்றின் உறுப்பினர்கள் இன்னும் பெயரிடப்படவில்லை.

அபே ஜனபல பக்‌ஷய சார்பில் அக்கட்சியின் செயலாளர் தனது பெயரை பிரேரித்துள்ள நிலையில், ஒரு புறம் ஞானசார தேரரும், மறுபுறம் அத்துரலிய ரத்தன தேரரும் தங்களது பெயர்களையே பிரேரிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

இதேவேளை ஐ.தே.க.வுக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனமும் இன்னும் தெரிவு செய்யப்படாமல் இழுபறியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய பட்டியல் உறுப்பினர்கள் (29)
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 17
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி
மொஹமட் முஸம்மில்
மர்ஜான் பளீல்
கலாநிதி சுரேன் ராகவன்
பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் (கட்சியின் தவிசாளர்)
பேராசிரியர் ரஞ்சித் பண்டார
பேராசிரியர் சரித ஹேரத்
பேராசிரியர் திஸ்ஸ விதாரண
சாகர காரியவசம் (கட்சியின் பொதுச் செயலாளர்)
மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்
ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க
திருமதி மஞ்சுளா திஸாநாயக்க
பொறியியலாளர் யாதமுனி குணவர்தன
கெவிந்து குமாரதுங்க
டிரான் அலஸ்
கலாநிதி சீதா அரம்பேபொல
ஜயந்த கெட்டேகொட

இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) - 01
தவராசா கலை அரசன்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - (AITC) - 01
செல்வராசா கஜேந்திரன்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 07
இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்
ரஞ்சித் மத்தும பண்டார
திஸ்ஸ அத்தநாயக்க
எரான் விக்ரமரத்ன
ஹரின் பெனாண்டோ
மயந்த திஸாநாயக்க
டயானா கமகே

தேசிய மக்கள் சக்தி (NPP) - 01
கலாநிதி ஹரினி அமரசூரிய

ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 01
அபே ஜனபல பக்ஷய (OPPP) - 01

இதுவரை வர்த்தமானிப்படுத்தப்பட்ட தேசியப் பட்டியல் உறுப்பினர்கள்

PDF File: 

Add new comment

Or log in with...