மேலும் 309 இலங்கையர்கள் நாடு திரும்பினர் | தினகரன்


மேலும் 309 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

- லெபனானிலிருந்து 245 பேர்
- துபாய், டோஹாவிலிருந்து 51 பேர்
- மும்பாயிலிருந்து 13 பேர்

கொவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 300 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் இன்று (15) அதிகாலை துபாய், கட்டார், மும்பாய், லெபனான் நாடுகளிலிருந்து இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இன்று காலை 7.30 மணியளவில் லெபனான் பெய்ரூட்டிலிருந்து UL 1506 எனும் விசேட விமானத்தில், 245 பேர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

துபாய் மற்றும் கட்டாரின் டோஹாவிலிருந்து 51 பேர், கட்டார் மற்றும் எதிஹாட் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, மும்பாயிலிருந்து ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான UL 1042 எனும் விமானத்தில் 13 பேர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்துள்ள விமான பயணிகள் அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தபட்டுள்ளதை தொடர்ந்து, தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 


Add new comment

Or log in with...