கைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி | தினகரன்


கைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி

சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை கட்டுப்பாடுகளின் கீழ்  பார்வையிடுவதற்கு இன்று (15) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாரத்திற்கு ஒரு தடவை மாத்திரம் கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

ஆயினும், கைதிகளை பார்வையிட வரும்போது, சுகாதார பாதுகாப்பு தொடர்பான பொருட்களை மாத்திரம் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதற்கான அனுமதி இதுவரை இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...