அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கான சேவை தொடரும் | தினகரன்


அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கான சேவை தொடரும்

தேர்தல் தோல்வி ஒரு பொருட்டல்ல

“தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் எதிர்வரும் நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படும் இடர்களிலிருந்து அந்த மக்களைக் காப்பாற்றுவேன்” என கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தோல்வி மற்றும் எதிர்கால அரசியல்  நடவடிக்கை தொடர்பில் தனது முகநூலில் விடுத்துள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,எதிர்வரும் காலங்களில் தொடர்ந்தும் அம்பாறை மாவட்டத்திலிருந்தே அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


Add new comment

Or log in with...