நான் கிரிக்கெட்டுக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் அல்ல | தினகரன்


நான் கிரிக்கெட்டுக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் அல்ல

தான் கிரிக்கெட்டுக்காக மட்டும் நியமிக்கப்பட்ட அமைச்சர் அல்ல என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் உள்ள தலதா மாளிகையில் (புதன்கிழமை) அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியில் தற்போது தோன்றியுள்ள நெருக்கடிக்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், பலரும் கிரிக்கெட்டின் மறுமலர்ச்சியில் கவனம் செலுத்தினாலும் நான் கிரிக்கெட்டுக்கு மட்டும் நியமிக்கப்பட்ட ஒரு அமைச்சர் மட்டும் அல்ல என்பதனை முதலில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நான் அனைத்து விளையாட்டுக்களுக்கும் நியமிக்கப்பட்ட ஒரு அமைச்சர் என தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டுக்கு தனியாக கவனிக்கும் குழு இருப்பதாகவும் முன்னாள் வீரர்களுடன் கலந்தாலோசித்து கிரிக்கெட் விளையாட்டை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.


Add new comment

Or log in with...