போலி மாணிக்கக்கற்களை விற்க முயன்ற இருவர் கைது | தினகரன்

போலி மாணிக்கக்கற்களை விற்க முயன்ற இருவர் கைது

அவிசாவளையில் போலி மாணிக்கக்கற்களை விற்பனை செய்ய  முயன்ற குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அவிசாவளை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதோடு, 02 போலியான மாணிக்கக்கற்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவிசாவளையைச் சேர்ந்த 48, 57 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேகநபர்களை இன்று (14) அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, இவ்வாறு போலி மாணிக்கக்கல் விற்பனை செய்யப்பட்டு, பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸ் நிலையத்திற்கு 05 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கைது செய்யப்பட்ட இச்சந்தேகநபர்களும் குறித்த மோசடியுடன் தொடர்புபட்டுள்ளனரா என்பது தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...