பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம் | தினகரன்


பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்

- அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

தனக்கு கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் இருந்ததாகவும், கொரோனா பரிசோதனை முடிவில் பொசிடிவ் என வந்தது என்றும் பயப்படும் படியாக இல்லை கவலைப்பட வேண்டாம் என்றும் தனக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்து, வீடியோவொன்றை வெளியிட்டிருந்தார்.

இன்று பிற்பகல் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

திரைப் பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப் பச்சன் குடும்பத்தினர், இயக்குனர் ராஜமவுலி, நடிகர் விஷால், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா என பலர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டனர். 


Add new comment

Or log in with...