நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நான்கு அணிகள் தயார் | தினகரன்


நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நான்கு அணிகள் தயார்

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நான்கு அணிகள் தயாராக உள்ளதாக, நியூஸிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 

இதற்மைய இந்த வருடக் கடைசி முதல் நியூசிலாந்தில் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நடைபெறவுள்ளன. 

மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் ஆகிய அணிகள் நியூஸிலாந்துக்குச் சென்று சர்வதேசத் தொடர்களில் விளையாடவுள்ளன. 

மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய அணிகள் டெஸ்ட் மற்றும் ரி-20தொடர்களில் விளையாடவுள்ளன. பங்களாதேஷ் அணி ஒருநாள் மற்றும் ரி-20தொடர்களிலும் அவுஸ்ரேலிய அணி ரி-20தொடரிலும் விளையாடவுள்ளன. 

அனைத்து அணிகளும் நியூசிலாந்துக்கு வருகை தர சம்மதம் தெரிவித்துள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் டேவிட் வயிட் தெரிவித்துள்ளார்.

இதனால் 37 நாள்களுக்குச் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெறும் என அவர் நம்பிக்கையுடன் உள்ளார்.    


Add new comment

Or log in with...