தபால் திணைக்களத்துடன் இணையும் Daraz | தினகரன்


தபால் திணைக்களத்துடன் இணையும் Daraz

தபால் திணைக்களத்துடன் இணையும் Daraz-Daraz Partners with Sri Lanka Post for Package Returns

இலங்கையின் மிகப் பெரிய ஒன்லைன் சந்தைத் தளம் என்ற வகையில் Daraz, இலங்கை தபால் திணைக்களத்துடன் இணைந்து கொள்கிறது. Daraz வாடிக்கையாளர்கள் தமது பொதிகளை மீளத் திருப்பி அனுப்பும் தேவை ஏற்படின், அதனை இலகுவாக மேற்கொள்வதற்கு இலங்கை தபால் நிறுவனத்தின் வலையமைப்பை பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இதற்கமைய Daraz வாடிக்கையாளர் ஒருவர் தமது பொதியை மீளத் திருப்பி அனுப்ப வேண்டி நேரிட்டால், அண்மையிலுள்ள தபால் நிலையத்தில் அதனைக் கையளிக்க முடியும். இதன்மூலம் மீளத் திருப்பி அனுப்பும் நடவடிக்கை மிகக் குறுகிய காலப்பகுதியில், அதேவேளை, அதிக நிலையங்களில் பெற்றுக்கொடுக்கக்கூடிய வசதியும் வாடிக்கையாளருக்குக் கிடைக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று தபால் ஆணையாளர் ரஞ்சித் ஆரியரத்ன மற்றும் Daraz Sri Lanka வின் இலங்கைப் பிரதிநிதி ராகில் பெர்னாண்டோ ஆகியோருக்கிடையில் இலங்கை தபால் திணைக்கள தலைமை அலுவலகத்தில் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

தபால் திணைக்களத்துடன் இணையும் Daraz-Daraz Partners with Sri Lanka Post for Package Returns

இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக, இலங்கை தபால் திணைக்களத்தின் 650 தபால் நிலையங்கள் Daraz பொதிகளை மீளத் திருப்புவதற்கான நிலையங்களாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கைத் தபால் திணைக்களத்தின் 2500 தொடக்கம் 3,000 வரையிலான தபால் நிலையங்களில் இதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் எதிர்காலத்pல் மேற்கொள்ளப்படும். Daraz இன் மீளத் திருப்பி அனுப்பும் காட்சிப் பலகை காண்பிக்கப்பட்டுள்ள 650 தபால் நிலையங்களில் சுமார் மூன்று கிலோ வரையிலான எடைகொண்ட பொதிகளை வாடிக்கையாளர்கள் திருப்பி அனுப்ப வைக்க முடியும்.

பொதிகளை மீளத் திருப்பி அனுப்புவதற்கான மிக அருகாமையலுள்ள தபால் நிலையத்தை அடையாளம் காண https://bit.ly/returnsdropoff என்ற இணைய தள முகவரியில் பிரவேசிக்கவும். மீளத் திருப்பி அனுப்பும் கொள்கைகளுக்கு அமைய, வாடிக்கையாளர்கள் தமது சகல தகவல்களையும் பொதி இலக்கம் மற்றும் உரிய பொருளின் ஆரம்ப நிலையிலேயே உள்ளவாறு மீளத் திருப்பி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஓர்டர் ரிட்டர்ன் நிபந்தனைகளுக்கு இணங்காத எந்தவொரு பொருளையும் Daraz நிறுவனமோ அல்லது தபால் சேவையோ ஏற்றுக்கொள்ள மாட்டாது. அதன் பின்னர், Daraz தெரிவு நிலையம் ஒன்றுக்கு 48 மணி நேரங்களுக்குள் இலங்கை தபால் திணைக்களம் குறித்த பொதியை கொண்டு சேர்க்கும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக கருத்து வெளியிட்ட Daraz நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ராகில் பெர்னாண்டோ, ‘வாடிக்கையாளர்களின் வசதிகளை அதிகரிப்பது மற்றும் பொருட்களை இலகுவாகத் திருப்பி அனுப்புவதற்கு ஏற்ற வசதிகளைப் பெற்றுக்கொடுப்பது எமது வர்த்தகத்தைப் பொறுத்த வரையில் ஒரு முக்கியமான அம்சமாகும்.

இலங்கை முழுவதும் விஸ்தரித்துள்ள இலங்கை தபால் நிறுவனத்தடன் இவ்வாறானதொரு தேவைப்பாட்டிற்காக இணைந்து கொள்வது எமது Daraz பயனாளிகளுக்கு மிகச் சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கக்கூடியது. இதன்மூலம் அவர்கள் பல்வேறு வசதிகளையும், அனுகூலங்களையும் அடைந்து கொள்கின்றனர். இலங்கையின் ஒன்லைன் வர்த்தகத்தின் முன்னோடி வகையில், பொது மக்களுக்குச் சேவைகளை மிகச் சிறந்த முறையில் பெற்றுக்கொடுக்க அரச நிறுவனங்களுடன் இணைந்து பெற்றுக்கொடுக்கக்கூடிய வாய்ப்புக்களை இனங்காண்பதில் Daraz மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றது’ என்று கூறினார். இவ்வாறான புதிய தகவல்களை அறிந்துகொள்ள விரும்பினால் நீங்கள் Daraz நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணைய தளத்தை பார்வையிடவும்.

Daraz தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ளவும், எவ்வாறு மீளத் திருப்பி அனுப்புவது என்ற தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் https://bit.ly/darazreturns என்ற இணைய தளத்தில் பிரவேசிக்கவும்.


Add new comment

Or log in with...