உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகர் ஜோன்சன் | தினகரன்

உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகர் ஜோன்சன்

ஹொலிவுட் நடிகரான ட்வாயன் ஜோன்சன் அதிகம் சம்பாதிக்கும் ஆண் நடிகராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும் பதிவாகி இருப்பதாக போபஸ் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.  

முன்னாள் மல்யுத்த வீரரான ஜோன்சன் 2019 ஜுன் 1 தொடக்கம் 2020 ஜுன் 1 வரை 87.5 மில்லியன் டொலர்களை சம்பாதித்துள்ளார். தவிர அவரது உடற்பயிற்சி ஆடை துறை மூலமும் பெரும் தொகையை ஈட்டியுள்ளார். இதில் முதல் பத்து இடங்களில் உள்ள நடிகர்களின் இந்த ஆண்டின் மொத்த வருவாய் 545.5 மில்லியன் என்பதோடு அதில் கால் பங்கிற்கும் அதிகமானது நெட்ப்லிக்ஸ் மூலம் ஈட்டியது என்று போர்பஸ் குறிப்பிட்டுள்ளது.  

ரெட் நொடிஸ் திரைப்படத்தின் இணை நடிகரான ரியான் ரெய்னோல்ட் 71.5 மில்லியன் டொலர்களுடன் இரண்டாவது அதிக சம்பளம் பெறும் நடிகராக உள்ளார்.  

இந்தப் பட்டியலின் முதல் பத்து இடங்களில் இருக்கும் ஒரே பொலிவுட் நடிகராக அக்ஷய குமார் இடம்பிடித்திருப்பதோடு அவர் 48.5 மில்லியன் வருவாயுடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.    


Add new comment

Or log in with...