கொழும்பின் பல பகுதிகளில் சனிக்கிழமை நீர் வெட்டு | தினகரன்


கொழும்பின் பல பகுதிகளில் சனிக்கிழமை நீர் வெட்டு

- சில இடங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

கொழும்பின் பல பகுதிகளில் நாளை மறுதினம் சனிக்கிழமை (15)  இரவு 8.00 மணி முதல் 09 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை (கொழும்பு 13), கிராண்ட்பாஸ் (கொழும்பு 14), மோதறை, மட்டக்குளி, முகத்துவாரம் (கொழும்பு 15) பகுதிகளிலேயே நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை அன்றையதினம் புறக்கோட்டை (கொழும்பு 11), புதுக்கடை (கொழும்பு 12) பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...