ஐரோப்பியருக்கான பயண கட்டுப்பாடு சீனாவில் தளர்வு

ஐரோப்பியர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளைச் சீனா தளர்த்தியுள்ளது.  

பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 36ஐரோப்பிய நாடுகளின் குடிமக்கள் சீனாவுக்குச் செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு சீனாவிலிருந்து அதிகாரத்துவ அழைப்புக் கடிதம் ஏதும் அவசியமில்லை என்று கூறப்பட்டது.  

இருப்பினும், சீனாவுக்குச் செல்லும் அனைத்துப் பயணிகளும் வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர். அத்துடன், அவர்கள் 14நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்.  

சீனா மார்ச் மாதம் அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் தடை விதித்திருந்தது. குறிப்பிட்ட திறன்மிக்க வெளிநாட்டு ஊழியர்கள் மட்டுமே சீனாவுக்குள் நுழைய முடிந்தது. அவர்களுக்கு சீனாவிலிருந்து அதிகாரத்துவ அழைப்புக் கடிதம் ஒன்றும் தேவைப்பட்டது.  


Add new comment

Or log in with...