530,000 வெளிநாட்டு ஊழியரை வெளியேற்ற குவைட் திட்டம் | தினகரன்


530,000 வெளிநாட்டு ஊழியரை வெளியேற்ற குவைட் திட்டம்

அரை மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்களை வெளியேற்றுவது தொடர்பான புதிய பரிந்துரை ஒன்று குவைட் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.  

நாட்டின் தொழிலாளர் சந்தையில் சமநிலையை கொண்டுவர இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக குவைட்டின் அல்–கபாஸ் பத்திரிகை இது பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது.  

பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மர்யம் அல் அகீல் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் இந்தத் தீர்மானத்தின்படி குறுகிய கால இலக்காக 120,000 சட்டவிரோத தொழிலாளர்கள் உட்பட சுமார் 360,000 வெளிநாட்டினர் வெளியேற்றப்படவுள்ளனர். இந்த கட்டத்தின் கீழ் 90,000 தேர்ச்சியற்ற தொழிலாளர்கள், அதேபோன்று நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட 150,000 தொழிலாளர்களும் களையெடுக்கப்படவுள்ளனர்.  

அரச மற்றும் தனியார் துறைகளில் 160,000 வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகளை குவைட் பிரஜைகளுக்கு வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.  

இந்த பரிந்துரையின் கீழ் சுமார் 530,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் நீக்கப்படவுள்ளதாக அந்த திட்டத்தை மேற்கோள்காட்டி அல்–கபாஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.    


Add new comment

Or log in with...