மாலக சில்வாவுக்கு பிணை | தினகரன்


மாலக சில்வாவுக்கு பிணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவுக்கு, பிணை வழங்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு (11) கைது செய்யப்பட்ட மாலக சில்வாவை, கடுவல நீதவான் நீதிமன்றத்தில் இன்று (12) முன்னிலைப்படுத்தியபோதே, இப்பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரி, மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய மாலக சில்வாவை, தலங்கம பொலிஸார் நேற்றிரவு கைது செய்திருந்தனர்.

கடந்த ஜூலை மாதம்  16ஆம் திகதி தலங்கம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரிடம்,  ஒரு இலட்சம் ரூபாவை சந்தேகநபர் கோரியிருந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.   


Add new comment

Or log in with...