புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 3 நாள் செயலமர்வு | தினகரன்


புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 3 நாள் செயலமர்வு

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 03 நாள் செயலமர்வொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவல இது தொடர்பாக தெரிவிக்கையில், பாராளுமன்ற சிறப்புரிமைகள், பாராளுமன்ற வரலாறு,  நிலையியல் கட்டளைகள் மற்றும் உறுப்பினர்களின் பொறுப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமென குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டவுடன் இந்த பயற்சி செயலமர்வுக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளவர்களுள் 60 க்கும் மேற்பட்டோர் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று தேசிய பட்டியலிலும் பல புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரையில் இடம்பெற்றுள்ளனர். இதற்கவைமாக இதுவரையில் புதிய பாராமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 78 ஆகும் என்றும் அவர் கூறினார்.

 


Add new comment

Or log in with...