20க்கு 20 உலகக் கிண்ணம் 2021 ல் இந்தியாவில் 2022 அவுஸ்திரேலியாவில் | தினகரன்

20க்கு 20 உலகக் கிண்ணம் 2021 ல் இந்தியாவில் 2022 அவுஸ்திரேலியாவில்

அடுத்த ஆண்டுக்கான ஆடவர் ரி 20 உலகக் கிண்ணம் இந்தியாவில் நடைபெறவுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த ரி 20 உலகக் கிண்ணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

எனினும் ஒத்திவைக்கப்பட்ட ரி 20 உலகக் கிண்ணமும், அடுத்த ரி 20 உலகக் கிண்ணமும் 2021, 2022 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து நடைபெறும் என ஐ.சி.சி. முன்னர் குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறு திகதி அறிவிக்கப்பட்ட ரி 20 உலகக் கிண்ணத் தொடர்களில் 2021 ஆம் ஆண்டுக்கான ரி 20 உலகக் கிண்ணத் தொடரே இந்தியாவில் நடைபெற, 2022 ஆம் ஆண்டுக்கான ரி 20 உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

அந்தவகையில் 2021 ஆம் ஆண்டுக்கான ரி 20 உலகக் கிண்ணம், 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான ரி 20 உலகக் கிண்ணம் ஒக்டோபர் 13 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறவிருந்த மகளிர் உலகக் கிண்ணம் 2022 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மகளிர் உலகக் கிண்ணம் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி தொடக்கம், மார்ச் மாதம் 7 ஆம் திகதி வரை நடைபெற முன்னர் ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...