வாழ்வின் ஆனந்தம் உங்கள் கைகளில் | தினகரன்

வாழ்வின் ஆனந்தம் உங்கள் கைகளில்

ஒரு தடவை ஒரு மனிதன் தெருவிலே போய்க் கொண்டிருந்தான். பல்வேறு வகையான கடைகள் இருப்பதைக் கண்டான். அவற்றிலே ஒன்று விசித்திரமான கடையாக இருந்தது. அதன் மேல் 'தெய்வீகத்தின் கடை' என எழுதப்பட்டிருந்தது. அங்கு தெய்வீகம் விற்பனை செய்யப்படுவதில்லை. அது தெய்வீகத்தினது கடை. அவன் அவ்வாறான ஒரு கடையை முன்னர் பார்த்ததே இல்லை. உள்ளே சென்ற பொழுது உள்ளே மிகவும் விசாலமான கடையாக இருந்தது.

அப்பொழுது ஒரு மனிதர் வந்து 'உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா' என கேட்டார். அதற்கு அவனும் 'ஆமாம், நீங்கள் இங்கே என்ன விற்பனை செய்கிறீர்கள்' என கேட்டான். அதற்கு அந்த மனிதரும் 'இது தெய்வீகத்தினது கடை. இங்கு அமைதி, ஆனந்தம் என்பன விற்கப்படுகிறன' என கூறினார்.

அதற்கு அந்த மனிதனும் 'உங்களிடம் அந்த பொருள்களின் சாம்பிள் இருக்கின்றதா என கேட்டான். அவர் 'ஆம் வாருங்கள்' என கூறி அவற்றை காட்டினார். அங்கு பெரிய பெரிய அலுமாரிகளில் இருந்தன. அவற்றுள் மிகவும் அழகான பொருட்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

வித்தியாசம் வித்தியாசமான நிறங்கள், மிகவும் அழகு வாய்ந்த பெரிய பெரிய பொருட்கள் அங்கே இருந்தன. 'இவையெல்லாம் என்ன' என அவன் கேட்டான். அதற்கு அவர் 'இது அமைதி, அது ஆனந்தம், இது தெளிவு' என அவற்றைக் காட்டினார்.

'ஆஹா, மிகவும் அழகாக இருக்கிறது' என்றான். 'நான் இவற்றை வாங்கலாமா' என அவன் கேட்டான். 'நிச்சயமாக 'என்றார். 'இவை எல்லாம் இலவசம்' என்று சொன்னார். அவன் 'சரி, எனது ஓடரை எடுங்கள். இவற்றில் உள்ளவற்றிலே ஒவ்வொன்றை எனக்கு பொதி செய்து தாருங்கள்' என கேட்டான்.

அதற்கு அவர் 'ஆம், நிச்சயமாக, இப்பொழுது வருகிறேன்' என்று கூறிவிட்டு சென்றார்.

சில நிமிடங்களின் பின்னர் அவர் வந்தார். அவரிடம் சிறிய சிறிய பெட்டிகள் இருந்தன. அந்த பெட்டிகளை அந்த மனிதரிடம் கொடுத்து 'இதுதான் உங்களது ஓடர். நீங்கள் கேட்டவை இந்த பெட்டியில் உள்ளன' என்றார். அதற்கு அந்த மனிதனும் 'வெளியே பார்த்தால் இவ்வளவு பெரிது பெரிதாக உள்ளனவே, அவற்றை எவ்வாறு இந்த சிறிய பெட்டிக்குள் அடைத்தீர்கள்' என கேட்டான்.

அதற்கு அவர் 'இவை வெறுமனே விதைகள் மட்டும்தான். உங்களின் உள்ளே உள்ள ஆனந்தம், உங்களின் உள்ளே தெளிவு என்பவற்றின் விதைகள் தான் இவை. நீங்கள் இந்த விதைகளை விதைக்க வேண்டும். அப்பொழுது உங்களுக்கு இந்த அழகிய பொருட்கள் எல்லாம் இந்த விதைகளில் இருந்து கிடைக்கும்' என்றார்.

இது மிகவும் அழகிய கதை. ஏனெனில் இவற்றின் விதைகள் தான் நமக்கு கிடைக்கும். விதைகள் மட்டும்தான். விதைகள் நம் உள்ளே உள்ளன. ஆனால் இந்த விதைகளை நாங்கள் ஒரு பொழுதும் விதைக்கவில்லை என்றால், நாங்கள் எவ்வாறு அதனது பழங்களை கற்பனை செய்ய முடியும்? இந்த விதைகளை நாங்கள் ஒருபோதும் விதைக்கவே இல்லை என்றால் எவ்வாறு அவற்றின் பலன்களை எதிர்பார்க்க முடியும்?

நாம் விரும்பும் இந்த விடயங்கள் நமக்கு தேவை என்றால் இந்த விதைகளை நாம் விதைக்க வேண்டும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள்தான் உங்களை காப்பாற்ற வேண்டும். கைகளை கழுவுங்கள், மற்றவர்களுக்கு இடையே ஆறு அடி இடைவெளி வைத்துக் கொள்ளுங்கள். இவை உங்களை இந்த கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும்.

மேலும் ஒரு நோய் உள்ளது. அது தான் சலிப்புத் தன்மை எனும் நோய். இதில் இருந்து யார் உங்களைக் காப்பாற்ற போகிறார்கள்? குழப்பம் எனும் நோய், அதிலிருந்து யார் உங்களை காப்பாற்றப் போகிறார்கள்? இதற்கு நீங்கள்தான் உங்களுக்குத் தேவை. இதனை கவனத்தில் கொள்ளுங்கள். ஆனந்தமாக இருங்கள்.

எல்லாம் உங்களை பொறுத்தது. பிறப்பு, இறப்பு எனும் இரண்டு சுவர்களுக்கும் இடையில், உங்களிடம் இந்த நேரம் உள்ளது. எல்லா விளையாட்டுக்களும் இந்த இரண்டு சுவர்களுக்கும் இடையே தான் நடைபெறுகின்றன. நீங்கள் இந்த நேரத்தை ஆனந்தமாகவும் கழிக்கலாம்.

அழுதழுதும் கழிக்கலாம். இதனாலே நேரத்திற்கு எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது.

ஆனால் இதனை நீங்கள் அழுதழுது கழித்தால், உங்களுக்குத் துன்பம் ஏற்படும். ஆனந்தமாக கழித்தால் உங்களுக்கு ஆனந்தம் கிடைக்கும். நீங்கள் உங்களது வாழ்வில் ஆனந்தமாக இருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன். எந்த சூழ்நிலையிலும், எந்த பரபரப்பான சூழ்நிலையிலும், உங்களது வாழ்வில் ஆனந்தம் இருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன். அந்த ஆனந்தம் சாத்தியம்.

 

 

மேலதிக விபரங்களுக்கு:
www.premrawat.com
https://www.tprf.org
or WhatsApp +94777793140

தொகுப்பு: இ.மனோகரன்


Add new comment

Or log in with...