குருணாகல் மேயர் உள்ளிட்டோருக்கு மீண்டும் பிடியாணை | தினகரன்

குருணாகல் மேயர் உள்ளிட்டோருக்கு மீண்டும் பிடியாணை

புவனேக ஹோட்டல் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில், குருணாகல் மேயர் உள்ளிட்டோருக்கு எதிராக, குருணாகல் நீதவான் நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளதாக, சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

ஏற்கனவே வழங்கப்பட்ட பிடியாணையை குருணாகல் பொலிஸார் நடைமுறைப்படுத்தாமை காரணமாக, பதில் பொலிஸ் மாஅதிபர் மற்றும் குருணாகல் பிரதி பொலிஸ் மாஅதிபர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் ஊடாக குறித்த பிடியாணையை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்துள்ளதாக, நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

அத்தோடு, சந்தேகநபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் உத்தரவையும் நீதவான் பிறப்பித்துள்ளார். 


Add new comment

Or log in with...