10 வருடங்கள் வரை மீள்செலுத்த ரூ 3 மில்லியன் வரை நிதி வசதி வழங்கும் அமானா | தினகரன்


10 வருடங்கள் வரை மீள்செலுத்த ரூ 3 மில்லியன் வரை நிதி வசதி வழங்கும் அமானா

10 வருடங்கள் வரை மீள்செலுத்த ரூ 3 மில்லியன் வரை நிதி வசதி வழங்கும் அமானா-Amana Bank offers Financing Up to 3 Million
அமானா வங்கியின் நுகர்வோர் நிதியுதவி பிரிவின் பிரதம அதிகாரி ராமகிருஷ்ணன் கிருபாகரன்

அமானா வங்கியானது அரசாங்க ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சமூகத்துக்கு ஆற்றிய சேவையை கௌரவப்படுத்தும் முகமாக, வங்கியூடாக வழங்கும் நிதிவசதி தொகை மற்றும் மீள் செலுத்தும் காலத்தையும் அதிகரித்துள்ளது.

அதிகரிக்கப்பட்ட நிதி வசதியான ரூ 3,000,000 தொகையும் 10 வருட மீளசெலுத்தல் காலப்பிரிவும், வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய மாதாந்த ஊதியத்தை பொறுத்து இலகுவான தவணை முறையிலான நிதிவசதியினை பெற்றுக்கொள்ள உதவுகின்றது.

இந்த சௌகாரியமாக  நிதி வசதியினூடாக, பிணையாளிகள் இல்லாமல்; வீடு, காணி, கட்டுமானப் பொருட்கள், வாகனம், சூரிய படல், தளபாடம், வீட்டுப்பாவனை மற்றும் தனிப்பட்ட பாவனைப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்

இந்த தனித்துவமான சலுகையை பற்றி அமானா வங்கியின் நுகர்வோர் நிதியுதவி பிரிவின் பிரதம அதிகாரி ராமகிருஷ்ணன் கிருபாகரன் கருத்துத் தெரிவிக்கையில் , 'இந்த நாட்டின் இளைஞர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் அறிவாற்றல் மற்றும் வாழ்க்கை வழிநடத்தலில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்கள், மற்றும் விரிவுரையாளர்கக்கு இந்த சேவையினை வழங்குவதில் நாம் பெருமிதம் கொள்கின்றோம். இத் திட்டத்தினூடாக வாடிக்கையாளர்கள் தமது கொள்வனவு திறனை அதிகரித்து கொள்வதோடு அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் வழி செய்கிறது என்றார்.

இந்த வசதியினைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு வாடிக்கையாளர்கள் 011 7 756 756 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முடியும், அல்லது www.amanabank.lk என்ற இணையத்தளத்திடனூடாக பெற்றுக்கொள்ளலாம்

அமானா வங்கி பற்றி
இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் அளிக்கப்பட்ட அமானா வங்கி பி.எல்.சி. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட ஒரு தனி நிறுவனமாகும். ஜித்தாவில் தலைமையகத்தைக் கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி (IsDB) குழுமம் பிரதான பங்குதாரர் என்ற முறையில் அமானா வங்கியில் 29.97%  பங்குளைக் கொண்டுள்ளது. IsDB குழுமம் ‘AAA’ தரப்படுத்தலைப் பெற்ற பல்துறை அபிவிருத்தி சார்ந்த நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் 57 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. அமானா வங்கி ஒரு தனி நிறுவனமாகும். ‘OrphanCare’Trust அமைப்பைத் தவிர அதனைப் பிரதிநிதித்துவம் செய்யும் உப நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்கள் எதுவும் கிடையாது.


Add new comment

Or log in with...