ரோஸி சேனாநாயக்கவின் கணவர் அத்துல சேனாநாயக்க காலமானார் | தினகரன்


ரோஸி சேனாநாயக்கவின் கணவர் அத்துல சேனாநாயக்க காலமானார்

ரோஸி சேனாநாயக்கவின் கணவர் அத்துல சேனாநாயக்க காலமானார்-Athula Senanayake Passed Away-Rosy Senanayake Family
காலஞ் சென்ற அத்துல சேனாநாயக்க மற்றும் ரோஸி சேனாநாயக்கவுடன் அவர்களது 3 பிள்ளைகள்

கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்கவின் கணவர், அத்துல சேனாநாயக்க (64) காலமானார்.

திடீர் சுகவீனமுற்ற நிலையில், நேற்று (08) கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று (09) பிற்பகல் காலமானார்.

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் ஸ்டேன்லி சேனாநாயக்கவின் மகனான அவர், தொழிலளவில் ஒரு வர்த்தகராவார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான அத்துல சேனாநாயக்க, இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட கனிஷ்க சேனாநாயக்கவின் தந்தை ஆவார் என்பதோடு, அவருக்கு திசக்ய சேனாநாயக்க, ராத்ய சேனாநாயக்க ஆகிய இரு புதல்விகளும் உள்ளனர்.

அவரது பூதவுடல், நாளையதினம் (10) மேயரின் இல்லத்திற்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...