ஐ.தே.கவினுள் இரு முன்னாள் அமைச்சர்கள் மோதல் | தினகரன்


ஐ.தே.கவினுள் இரு முன்னாள் அமைச்சர்கள் மோதல்

தேசியபட்டியல் ஆசனப் போட்டி

ஐக்கிய தேசியக் கட்சிக்கு, கிடைத்துள்ள ஒரே ஒரு தேசிய பட்டியலுக்கு முன்னாள் அமைச்சர்கள் இருவர் மோதிக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இந்த இரண்டு பிரபலங்களும் தங்களுக்கு உறுப்பினர் பதவியை வழங்குமாறு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

தோல்வியடைந்த வேட்பாளர்கள் எவரும் பாராளுமன்றத்திற்கு செல்வதற்கு தேசிய பட்டியலில் வாய்ப்பு வழங்கப்படாதென ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனால் ஒரு போதும் பாராளுமன்றத்திற்கு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாதென ரணில் குறிப்பிட்டுள்ளார். 

தேசியப் பட்டியல் தனக்கானதென ரணில் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமானவரிடம் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய தேசிய பட்டியலில் ரணில் பாராளுமன்றத்திற்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.


Add new comment

Or log in with...