சிறிகொத்த இன்று வெறும் கட்டடமே! | தினகரன்


சிறிகொத்த இன்று வெறும் கட்டடமே!

ரஞ்ஜித் மத்தும பண்டார கவலை

‘சிறிகொத்த’ என்பது இன்று வெறும் கட்டடமாக மாறிவிட்டதென ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், சிறிகொத்த என்பது வெறும் கட்டடமாக இன்று மாறிவிட்டது.

இந்த வெற்றுக் கட்டடத்தை கைப்பற்ற வேண்டிய தேவை எமக்குக் கிடையாது.  சிறிகொத்தவுக்கு ஆதரவளித்த பெரும்பான்மையான உறுப்பினர்களும், மக்களும் இன்று எம்முடன் தான் இருக்கின்றனர். இதற்கான தீர்மானத்தையும் மக்கள் இன்று வெளியிட்டுள்ளார்கள். நாம் எந்தத் தரப்புடனும் தனிப்பட்ட ரீதியாக கோபம் கொள்ளவில்லை.   மக்கள் வழங்கிய ஆணைக்கிணங்கவே செயற்பட்டு வருகிறோம். ரணில் விக்கிரமசிக்கவின் செயற்பாடுகளின் பலனாகவே, மக்கள் இந்த முடிவை வெளியிட்டுள்ளனரென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...