காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. வரை அதிகரிக்கும் சாத்தியம்! | தினகரன்

காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. வரை அதிகரிக்கும் சாத்தியம்!

- மீனவர்கள் உள்ளிட்ட கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கொழும்பு வரை மற்றும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகமானது எதிர்வரும் 18 மணித்தியால காலப்பகுதியில், மணிக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலைமை எதிர்வரும் 18 மணித்தியாலங்களுக்கு தொடரும் என எதிர்பார்ப்பதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 50 கிலோமீற்றர் வரை  அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுவோர் மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுதவாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேருவளையிலிருந்து காலி ஊடாக அம்பாந்தோட்டை வரை கரையோர கடல் பகுதிகளில் கடல் அலை 2 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை, நாட்டின் பல பிரதேசங்களில் இன்றையதினம் மழை பெய்யக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 


Add new comment

Or log in with...