வெலிக்கடை சிறை சுவருக்கு மேலதிகமாக 15 அடி வேலி | தினகரன்


வெலிக்கடை சிறை சுவருக்கு மேலதிகமாக 15 அடி வேலி

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவு பகுதியை நோக்கி போதைப்பொருள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் வீசப்படுவதை தடுக்கும் வகையில், புதிய பாதுகாப்பு வேலியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் பெண்கள் பிரிவுக்கு தொடர்ச்சியாக போதைப்பொருள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் வீசப்படுவது கண்காணிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஆணையாளர் (நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

எனவே இதனை தடுக்கும் வகையில், சுமார்  15 அடி உயரத்துடன் கூடியதாக புதிய பாதுகாப்பு வேலியை அமைப்பதற்கு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.     


Add new comment

Or log in with...