பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு தேவகௌடா டுவிட்டரில் வாழ்த்து | தினகரன்


பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு தேவகௌடா டுவிட்டரில் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு இந்தியாவின் முன்னாள் பிரதமரும் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஜனதா தளம்  கட்சியின் தலைவருமான தேவகௌடா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இவர் தனது டுவிட்டர் தளத்தினூடாகவே தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“எனது அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள். மக்கள் ஆணையைப் பாதுகாப்பதற்காக. உங்கள் நாட்டையும் அதன் அனைத்து மக்களையும் அமைதி மற்றும் செழிப்பு மிகு பாதையில் கொண்டு செல்வதற்கான உங்கள் முயற்சியில் நீங்கள் மிகச் சிறப்பதை விரும்புகிறேன். எனது அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...