குருணாகல் மேயர் உள்ளிட்ட ஐவரை கைது செய்ய பிடியாணை | தினகரன்

குருணாகல் மேயர் உள்ளிட்ட ஐவரை கைது செய்ய பிடியாணை

குருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ, மாநகர ஆணையாளர், மின் பொறியியலாளர் உள்ளிட்ட ஐவரைக் கைது செய்யுமாறு, குருணாகல் நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.

குறித்த 05 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பதில் பொலிஸ் மாஅதிபருக்கு,  சட்ட மாஅதிபரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இப்பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று, குறித்த பிடிவிறாந்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் மதிப்பு மிக்க குருணாகல் புவனேக  ஹோட்டல் தகர்க்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக, குறித்த சந்தேகநபர்கள் மீது பிடிவிறாந்து பெற்று, அவர்களைக் கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் நேற்று (06) உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...