ரிஷாட் பதியுதீனின் மனு நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் தான் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கான தடை உத்தரவு விதிக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, உச்ச நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

புவனேக அலுவிஹாரே, எல்.டீ.பீ தெஹிதெனிய, எஸ். துரைராஜா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் குறித்த மனு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27ஆம் திகதி, குறித்த மனு உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிபதி பிரியந்த ஜயவர்தன தனிப்பட்ட காரணங்களை முன்னிட்டு அதிலிருந்து விலகியிருந்தார்.

எனவே, இம்மனு மீதான விசாரணையை இன்று வரை ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...