1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் அமையவுள்ள மிக வலுவான அரசாங்கம் | தினகரன்


1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் அமையவுள்ள மிக வலுவான அரசாங்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிப்பு  

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன கடந்த 1977 ஆம் ஆண்டு அமைத்த அரசாங்கத்தின் பின்னர் மிகவும் வலுவான அரசாங்கத்தை இம்முறை தமது கட்சி அமைக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. 

நேற்றுக் காலை 07 மணிக்கு வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதுடன் வாக்கெண்ணும் நிலையங்களிலிருந்து கிடைக்கும் தகவல்களுக்கமைய 1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் தனிக் கட்சியாக அதிகமான ஆசனங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றுமெனவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது. 

இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏனைய கட்சிகளை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையிலிருந்து வருகிறது. 


Add new comment

Or log in with...