சீரற்ற காலநிலை; மின்விநியோகத்தில் பாதிப்பு | தினகரன்


சீரற்ற காலநிலை; மின்விநியோகத்தில் பாதிப்பு

கடும் மழை மற்றும் காற்றை தொடர்ந்து, மின் இணைப்புகளின் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக பல இடங்களில் மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு (05)  சில மாவட்டங்களில் இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு மின்தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் மின் விநியோகத்தை சீர்செய்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...