பெய்ரூட் வெடிப்புச் சம்பவம்; இலங்கைத் தூதரகத்திற்கு சிறிய சேதம் | தினகரன்

பெய்ரூட் வெடிப்புச் சம்பவம்; இலங்கைத் தூதரகத்திற்கு சிறிய சேதம்

- இதுவரையில் 78 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் காயம்

லெபனானின் பெய்ரூட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து, அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு சிறியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால், தூதரக ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், லெபனானுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று (04) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில், 78 பேர் உயிரிழந்துள்ளதோடு, 4,000 இற்கும் அதிகளவானோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் லெபனானுக்கான இலங்கைத் தூதரகம் அமைந்துள்ளதோடு, வெடிப்புச் சம்பவத்தினால் ஏற்பட்ட அதிர்வில் தூதரகத்தின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

ஆயினும், இவ்வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...