​மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான ரி-20 தொடரை ஒத்தி வைத்தது அவுஸ்திரேலியா

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அக்டோபர் மாதம் நடைபெற இருந்த ​மேற்கிந்திய தீவு  அணிக்கெதிரான தொடரை ஒத்திவைத்தது அவுஸ்திரேலியா.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்திரேலியா சர்வதேச எல்லையை மூடியுள்ளது. இதனால் அக்டோபர் நவம்பரில் நடைபெற இருந்த உலக கிண்ண தொடரை நடத்த முடியாது என்று கூறிவிட்டது. இதனால் ரி 20 உலக கிண்ணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலக கிண்ண தொடருக்கு பயிற்சிப் போட்டி ஆக ​மேற்கிந்திய தீவு  உடன்  ரி 20 கிரிக்கெட் தொடரை விளையாட இருந்தது. அவுஸ்திரேலிய அரசைப் பொறுத்த வரைக்கும் டிசம்பர் மாதம் வரை எந்தவித விளையாட்டையும் நடத்த விரும்பவில்லை. இதனால் ​மேற்கிந்திய தீவு  அணிக்கெதிரான தொடரை ஒத்தி வைக்க அவுஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. அவுஸ்திரேலியாவின் முடிவை ​மேற்கிந்திய தீவு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் தொடரை அடுத்த ஆண்டு அல்லது 2022-ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா அக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ரி 20 தொடரில் விளையாட இருந்தது. ஐபிஎல் போட்டி நடைபெற இருப்பதால் இந்த தொடரும் ரத்து செய்யப்பட இருக்கிறது.

அவுஸ்திரேலியா செப்டம்பர் மாதம் இங்கிலாந்து சென்று வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதுதான் கொரோனாவிற்குப் பிறகு அவுஸ்திரேலிய அணி விளையாடும் முதல் சர்வதேச தொடராகும்.


Add new comment

Or log in with...