SLT - Epic Technology இணைந்து ‘Helaviru டிஜிற்றல் பொருளாதார மையம்’ | தினகரன்


SLT - Epic Technology இணைந்து ‘Helaviru டிஜிற்றல் பொருளாதார மையம்’

SLT - Epic Technology இணைந்து ‘Helaviru டிஜிற்றல் பொருளாதார மையம்’-SLT and Epic Technology Group launch "Helaviru Digital economic center", an online platform for farmers

- விவசாயிகளுக்கான தளம் www.helaviru.lk

இந்த வலயத்தில் டிஜிற்றல் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவதில் முன்னணி சேவை வழங்குநர்களான ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனம் - தேசிய தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநரும், எபிக் டெக்னோலஜி குழுமமும் இணைந்து, தெற்காசியாவில் தொடரறா தளமான ஹெலவிரு டிஜிற்றல் பொருளாதார மையம் ஒன்றை 2020 ஜுலை 31 இல் பெருமையுடன் ஆரம்பித்து வைத்துள்ளன.

ஹெலவிரு விவசாய மற்றும் பொருட்கள் வர்த்தக தளம் என்பது, கிளவ்ட் அடிப்படையிலான டிஜிற்றல் சந்தைப்படுத்தல் நிலையமாகும். இது, விவசாயப் பொருட்களின் வர்த்தக நடவடிக்கைகள் (வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல்) மற்றும் வேளாண்மைப் பொருட்கள், பண்ணை உற்பத்திப் பொருட்கள் என்பவற்றை பல்வேறு பங்குதாரர்களிடையே தடையின்றி இணைக்கும் ஒரு விநியோக சங்கிலியாகும்.

SLT - epic இணைந்து ‘Helaviru டிஜிற்றல் பொருளாதார மையம்’-SLT and Epic Technology Group launch "Helaviru Digital economic center", an online platform for farmers

ஹெலவிரு தளம் டிஜிற்றல் முறையில் இணைக்கப்பட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் (விவசாயிகளும் பயிர் வளர்ப்பவர்களும்), சிறிய அளவிலான சேகரிப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பெரிய நுகவோர்கள் (நவீன சந்தைகள், உணவு பதப்படுத்தல் தொழில்கள், ஹொட்டேல் போன்றவை) மற்றும் விவசாயப் பொருள் ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கிடையில் சுற்றுச் சூழல் அமைப்பை உருவாக்குவதுடன், அவர்களுக்கிடையில் இலகுவானதும், பாதுகாப்பானதுமான வியாபார நடவடிக்கைகளை வழங்கும்.

இதனைவிட போக்குவரத்து மற்றும் விநியோக சேவை வழங்குநர்கள், உர விநியோகத்தர்கள், பயிர்கள் மற்றும் விதை விநியோகத்தர்கள், துணைப் பொருட்கள் மற்றும் சேவைகள் தயாரிப்பாளர்கள், விவசாயக் காப்புறுதி வழங்குநர்கள், வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் போன்றவற்றை பிரதான பங்குதாரர்களுடன் இணைத்து இந்த தளம் ஊடாக அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளை இணைப்பதுடன் இலங்கையின் விவசாயத் துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்துவதாக இருக்கும்.

ஹெலவிரு டிஜிற்றல் பொருளாதார மையத்தின் செயற்பாடுகளுக்கு SLTநட்புறவு ஆதரவை வழங்குகிறது. அதேவேளை, அதன் தளத்தை அதிநவீன முறையில் மேம்படுத்தவம் உதவ இருக்கிறது. iDCயின் நம்பகத்தமையையும் பாதுகாப்பையும் தொழில்முறை ஆதரவின் மூலம் SLTஉறுதி செய்கிறது. மேலும், பயனாளிகள் குறுந்தகவல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் வசதிகளுடன் IVR மற்றும் அழைப்பு நிலையங்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த தளத்தில் உபாய ரீதியான பங்குதாரர்களாக இருக்கும் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றில் இருந்து நிதியுதவி பெறுவதற்கு பாவனையாளர்கள் விண்ணப்பிக்க முடியும். ஆண்டுகள் முன்னோக்கிச் செல்ல ஹெலவிரு விவசாயத்துறையில் பங்குதாரர்களின் நடத்தைப் புள்ளி விபரங்கள், வணிக நடவடிக்கைகள் மற்றும் பரிவர்த்தனைகள் தொடர்பான ஒரு மத்திய தரவுத் தளம் உருவாக்கப்படும். இது முன்கணிப்பு பகுப்பாய்வு, போக்கு முன்கணிப்பு மற்றும் விவசாயத்துறையில் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும்.

அத்துடன் இந்த திட்டத்தில் எம்மோடு கமத்தொழி;ல் அமைச்சு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை, மில்கோ மற்றம் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் ஆகியனவும் கைக்கோர்துள்ளன.

இங்கு இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றிய SLTகுழுமத்தின் தலைவர் திரு. ரொஹான் பெர்னாண்டோ, ‘தேசிய தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநர் என்ற அடிப்படையில் இத்தகைய தேசிய நடவடிக்கைகளில் இணைந்து செயற்படுவதில் நாம் பெருமையடைகின்றோம். ஹெலவிரு டிஜிற்றல் பொருளாதார மையம் வேளாண்மை மற்றும் விவசாயத் துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், இந்நாட்டின் முன்னணி வர்த்தகத் தளங்களில் ஒன்றாகும்.

எமது ஒரு பகுதியாக இருந்த இந்த துறையை புதுப்பிக்க நாம் பங்களிப்பதில் ஆர்வமாக உள்ளோம். இது எமது பல நூற்றாண்டுகால நாகரீகத்தில் ஒரு பகுதியாகும். டிஜிற்றல் தொழில்நுட்பத்தை விவசாயிகளிடம் எடுத்துச் செல்வது அவர்களை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்துவதை நோக்கிய ஒரு படியாகும். இலங்கை வங்கி, பாதுகாப்பான பரிவர்த்தனையை வழங்கும் கட்டண நுழைவாயிலாக இருக்கும். ஹெலவிரு டிஜிற்றல் பொருளாதார மையத்திற்கு டிஜிற்றல் தீர்வினை வழங்கும் எப்பிக் லங்காவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்’ என்று கூறினார்.

எபிக் டெக்னோலஜி குழுமத்தின் நிர்வாகத் தலைவர் கலாநிதி நயனா தெஹிகம இங்கு கருத்து வெளியிடுகையில், ‘ஹெலவிரு டிஜிற்றல் பொருளாதார மையத்தை கருத்தியல் செய்ததில் எப்பிக் பெருமையடைகிறது. மேலும், இலங்கையின் தொடர்பாடல் துறையில் சந்தேகமின்றி முன்னிலை வகிக்கும் SLT உடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயற்படுவதில் மகிழ்ச்சியடைகிறது.

SLTயுடன் இணைந்து ஹெலவிரு இலங்கையின் விவசாயத்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என நாம் நிச்சயமாக நம்புகிறோம். தொடரறா வர்த்;தகத் தளம் ஒன்றை விவசாயத்துறை பங்குதாரர்களுக்கு வழங்குவது மாத்திரமன்றி இறுதி நுகர்வோருக்கு எடுத்துச் செல்லும் விவசாயப் பொருட்களின் விலையை குறைப்பதும் இந்த ஒன்லைன் தளத்தின் நோக்கமாகும்.

அதேவேளை, விவசாய உற்பத்தியாளர்கள் மற்றும் திரட்டுபவர்களுக்கு வருவாயை அதிகரிப்பதும் எமது இலக்காகும். கணிசமான அளவு கழிவு காரணமாக தேவையற்ற செலவுகள், தேவையற்ற கையாளுதல் சம்பந்தமான தடைகள் ஆகியவற்றை தடுப்பதன் மூலம் இடைத்தரர்கள் உட்பட ஒவ்வொரு பங்குதாரரும் நன்மையடைவதை ஹெலவிரு உறுதி செய்யும். அதேவேளை, ஹெலவிரு இடைத் தரகர்களை விநியோக சங்கிலியில் இருந்து அகற்றாது இந்த நோக்கத்தை அடையும்’ என்று கூறினார்.

ஹெலவிரு டிஜிற்றல் பொருளாதார மையம் அதன் பெயரைப் போலவே இந்த நாட்டில் விவசாயிகளுக்கு கூடுதல் வெளிப்பாடு மற்றும் அவர்களின் விவசாயத்தை ஆதரிக்க ஒரு பரந்த தளத்தை அவர்களின் விவசாயத் தேவைகளுக்கு வழங்குவதன் மூலம் வீரர்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கும்.


Add new comment

Or log in with...