எமது சுகாதார நடைமுறைகள் மீது நம்பிக்கை வைத்தமைக்கு நன்றி | தினகரன்


எமது சுகாதார நடைமுறைகள் மீது நம்பிக்கை வைத்தமைக்கு நன்றி

எமது சுகாதார நடைமுறைகள் மீது நம்பிக்கை வைத்தமைக்கு நன்றி-President Gotabaya Rajapaksa Thank Voters

எமது சுகாதார வழிகாட்டுதல்களில் நம்பிக்கை கொண்டு வாக்களித்த மக்களுக்கு தான் நன்றி தெரிவிப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும், ட்விற்றர் கணக்குகளில் இடுகையொன்றை இட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இன்று (05) நடைபெற்ற பொதுத் தேர்தலில் அண்ணளவாக 71% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. COVID-19 இன் ஆபத்து இன்னும் உலகத்திலிருந்து மறைந்துவிடாத நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்திய தெற்காசியாவின் முதல் நாடு என்ற வகையில் எமது சுகாதார வழிகாட்டுதல்களில் நம்பிக்கை கொண்டு வாக்களித்த மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்."

 

 


Add new comment

Or log in with...