2020 பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நிறைவு | தினகரன்


2020 பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நிறைவு

ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு சிறிது நேரத்திற்கு முன்பு நிறைவடைந்துள்ளது.

12,985 வாக்களிப்பு நிலையங்களில், இன்று (05) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பு,  பிற்பகல் 5.00 மணியுடன்  நிறைவடைந்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்றையதினம் வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாக, தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாக்களிப்பு இடம்பெற்ற காலப்பகுதியில், சட்டத்தை மீறிய 520 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...