தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்புப் பாதுகாப்பு | தினகரன்


தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்புப் பாதுகாப்பு

நாட்டில் சிறப்பு பாதுகாப்புத் திட்டம் அமுலிலிருக்குமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

அத்துடன் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். 

இன்று முதல் தேர்தல் கடமைகள் முடியும் வரை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சோதனைச் சாவடிகள் நாடு முழுவதும் இருக்குமென்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சேனாரத்ன மேலும் கூறினார். 

இதேவேளை, 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை காலை 07 மணிக்கு ஆரம்பமாகிறது. அதே நாளில் மாலை 05 மணிக்கு வாக்களிப்பு நிலையங்களின் பணிகளை முடிவுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...